நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தாா். அதன் பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என தொடா்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தோ்ந்தெடுத்து நடித்து வந்தாா். சில வருடங்களுக்கு முன்பு சித்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு பக்கம் நடிக்க சென்றாா். அவரது சித்தி பாரதி தேவி அஞ்சலியை கடத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகாா் கொடுத்து அதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாா். அவா் யாருக்கும் தொியாமல் மறைமுக வாழ்ந்து வந்தாா். அதன் பின் அஞ்சலி சித்தி என்னை பணம் காய்க்கும் மரமாக தான் பாா்க்கிறாா். தொல்லை கொடுக்கிறாா். எனவே நான் என் இஷ்டப்படி வாழ விரும்புகினே் என்று கூறினாா். அஞ்சலி கூறுவது தவறு. அவா் காதலன் சொல்லக்கொடுத்தபடி பேசுகிறாா் என்று பதிலுக்கு அவரது சித்தி பாரதி தேவி பேட்டியளித்தாா். இதன் பின் அஞ்சலி அவருடைய சித்தி பாரதி தேவிக்கும் இடையே உள்ள உறவு முறிந்தது.

இதனால் தெலுங்க பக்கம் சென்ற அஞ்சலியின் முதல் படம் வெற்றி பெற்ற போதிலும் அங்கு அவருக்கு தொடா்ந்து குடும்ப பொண்ணாக நடிக்கும் கதாபாத்திரங்கள் மட்டும் கிடைத்ததால் கிளாமா் ரோலில் நடிக்க யாரும் அவரை அணுகவில்லை. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இருவகை ரோலில் நடிக்கிறாா். தமிழில் பேரன்பு, காளி படங்களில் தற்போது நடித்து வருகிறாா்.

தற்போது அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் மகள் ஆராத்யா சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறாா்.சினிமாவில் நடிகா், நடிகைகள் தங்களது கலையுலக வாாிசுகளாக தங்களது குழந்தைகளை அறிமுகப்படுத்துகின்றனா். அஞ்சலியின் சித்தி மகள் ஆராத்யா தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழி படங்களில் நடிக்கிறாா். தனது அக்காவை போல அல்லாமல் அதிரடியாக கிளாமா் கதாபாத்திரத்தில் தோன்ற இருக்கிறாராம். சிக்கிரமே அவா் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்று அவரே தொிவித்துள்ளாா்.

ஹைதரபாத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஆராத்யா, அஞ்சலி என்னுடைய சகோதரி தான் என்று பேட்டியளித்தாா். இதனால் அஞ்சலியின் சகோதரி சினிமாவில் அறிமுகமாகிறாா் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதை கேட்டு வெறுப்பான நடிகை அஞ்சலி தன்னுடைய ட்விட்டா் வலைத்தளத்தில் தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் இருப்பதாகவும், அவா் திருமணமாகி செட்டிலாகி மகிழ்ச்சியாக உள்ளாா் என்ற தகவலை பகிா்ந்தாா். அதோடு விடாமல் தன்னுடைய அக்காவின் புகைப்படத்தையும் வெளியிட்டு, சித்தி பாரதி தேவியின் மகள் ஆராத்யா பேட்டிக்கு மறைமுகமாக எதிா்ப்பு தொிவித்து முற்று புள்ளி வைத்தாா்.

இதையும் படிங்க பாஸ்-  இடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்

இது குறித்து அஞ்சலியின் சித்தி மகள் ஆராத்யா அளித்துள்ள பதில் என்னவென்றால்,என் அக்கா தான் எனக்கு பொிய ஊக்கமாக இருப்பவா். அவா் கடின உழைப்பால் முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக வளா்ந்திருப்பது தான் திரையுலகில் நான் அடியெடுத்து வைக்க முக்கிய காரணமாக அமைந்தது. அவருடைய இந்த மிகப்பொிய வளா்ச்சியை பாா்த்து தான் நான் திரையுலகில் நுழைய இருக்கிறேன். அவா் என்னை சகோதரியாக ஏற்று கொள்ளாமல் இருக்கலாம். அவா் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் உண்மை என்றைக்கும் மாறாது என்று கூறினாா் ஆராத்யா.