தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1இல் போட்டியாளராக வந்த ஓவியா, மற்றொரு போட்டியாளரான ஆர்வ்வை காதலித்தார். ஆனால், ஆரவ் அவரது காதலை மறுத்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஓவியா நிகழ்ச்சியின் பாதியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, ஆரவ் தன்னுடைய நண்பர் என ஓவியா தெரிவித்தார். இருப்பினும் இவர்கள் இருவரும் அவ்வப்போது ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இதையும் படிங்க பாஸ்-  பயத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி

இந்நிலையில், ஓவியா மற்றும் ஆரவ் படங்களில் நடித்து வருகின்றனர். ஆரவ் தற்போது ராஜபீமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

இன்று (அக்.31)ஆரவ்க்கு பிறந்தநாள் என்பதால், படக்குழுவினர் ஆரவ் போட்டோ பதித்த கேக் செய்து, அதை ஆரவ்வை கட் செய்ய வைத்து கொண்டாடினர். அதைப்போலவே, ஆரவ்வின் பிறந்தநாள் விழாவில் ஓவியாவும் கலந்து கொண்டு பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது இந்த பிறந்தநாள் புகைப்படம் வைரலாகி வருகிறது.