உன்மேல் காதல் இல்லை ; ஓவியாவிடம் போட்டு உடைத்த ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விவகாரங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாரும் ஓவியாவிடம் நெருங்கி பழகுவதில்லை. ஆரவ் மட்டுமே ஓவியாவிடம் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், சில சமயங்களில் அவருடன் நெருக்கமாக பழகுகிறார்.

இந்நிலையில், நான் உன்னை நேசிக்கிறேன். என் காதலை ஏற்றுக்கொள் என ஆரவிடம் கெஞ்சும் அளவுக்கு சென்றார் ஓவியா. ஆனால், இந்த விவகாரத்தில் தனது சினிமா எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என திடீர் ஞானோதயம் அடைந்த ஆரவ், ஓவியாவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அல்லது ஏற்றுக்கொள்ளாதது போல் நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஓவியாவை தவிர்க்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன், ஓவியா, சினேகன், ஆரவ் ஆகிய மூவரும் அமர்ந்து பேச, என்னை காதலிக்கிறாயா இல்லையா? உண்டு அல்லது இல்லை என கூறிவிடு என ஓவியா கேட்க, எனக்கு உன் மேல் காதல் இல்லை என ஆரவ் மறுக்கிறார். அதைக் கேட்டு ஓவிய அதிர்ச்சி அடைகிறார். அடுத்த காட்சியில், உன் பக்கம் நியாயம் இருக்கிறது. உனக்கு ஆதரவாக நான் இருப்பேன் என ஒவியாவிடம் வையாபுரி கூற, சிரித்தபடியே அங்கிருந்து வெளியேறுகிறார் ஓவியா.