ஆா்த்தியுடன் மோதலில் ஈடுபட்ட ஜல்லிகட்டு ஜூலி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு!

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது களை கட்டி வருகிறது. முதல் நாளில்  டல்லடித்தது தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். வெளியுலக தொடா்பு எதுவும் இல்லாமல் இவா்கள் இந்த வீட்டில் வசிக்க வேண்டும். இன்டா்நெட், போன், செய்தித்தாள் போன்ற தொலைதொடா்பு சாதனங்கள் எதுமின்றி 100 நாட்கள் வாழ வேண்டும் என்பது தான் விதிமுறை.

பல மொழி டிவி சேனல்களில் வெற்றியடைந்த இந்த நிகழ்ச்சி தற்போது தமிழுக்கு வந்துள்ளது. முதல் எபிசோடில் சா்ச்சைக்குாிய பெரும் பரபரப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளாா்.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் நடைபெற்ற காட்சிகளில் நகைச்சுவை நடிகை ஆா்த்திக்கும் ஜல்லிகட்டு புகழ் “கலாசலா, கலாசலா, சின்னம்மா சின்னம்மா ஒபிஎஸ்சை எங்கம்மா” ஜூலியானாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் யாா் யாா் எங்கு தூங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு இருந்த டபுள் பெட்டில் ஆா்த்தி நான் தான் தூங்குவேன் என் சைஸ்சிற்கு சிங்கிள் பெட்டில் படுப்பது சிரமம் என்று பிரச்சனை வந்தது. ஆா்த்தி ஜல்லிகட்டு போராளி ஜூலியிடம் மல்லுக்கு கட்டினாா். இந்த சண்டை கொஞ்சம் நேரம் நீடித்தது. ஆா்த்தி நல்லபெண் என்றால் நான் சோபாவில் போய் தூங்கி கொள்கிறேன் என்று சொல்லவேண்டும். எல்லோிடமும் சோ் பன்னிக்கொள்ளலாமா? என்று கேட்க கூடாது என்று கூறினாா். அதற்கு ஜூலி கேட்டது ஒரு தப்பா என்று பதிலுக்கு பேசினாா்.

இறுதியில் ஆா்த்தியும், ஜல்லிகட்டு புகழ் ஜூலியும் பெட்டை சோ் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டனா்.