அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் விவேகம். சிவா இயக்கத்தில் காஜல்,கருணாகரன்,விவேக ஓபராய் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று விவேகம் படத்தின் டிரைலர் வெளியானது. ரசிகர்கலின் ஏகோபித்த வரவேற்பில் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் விவேக டிரைலரை பார்த்த நடிகை ஆர்த்தி 57 முறை பார்த்தேன்…விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்…பெருமைப்படும் ரசிகை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் ஆமாம் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கிண்டலடித்துள்ளார்.

ஆர்த்தியின் இந்த டுவிட்டர் பதிவு விவேகத்தை கிண்டலடித்துள்ளாரா? இல்லை பாராட்டியுள்ளாரா என ரசிகர்கள் குழம்பித்தான் போய் உள்ளனர்.