பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள ஆரவின் செயல்பாடுகள் குறித்து நடிகை ஆர்த்தி கிண்டலடித்துள்ளார்.

நடிகை ஓவியாவின் நெருக்கமாக பழகி வந்த ஆரவ், கடந்த சில நாட்களாக அவரை தவிர்ப்பது போல் நடந்து கொள்கிறார். மேலும், மற்றவர் முன்னிலையில் ஓவியா தன்னிடம் நெருக்கமாக பழகுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் கூறிவந்தார். மேலும், தன்னிடம் அப்படி பழகாதே என ஓவியாவிற்கு அறிவுரையும் கூறினார்.

இந்த விவகாரம் ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. எனவே, அவர்கள் ஆரவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “ இருக்கு.. இந்த சனிக்கிழமை குறும்படம் இருக்கு.. ஆரவ் லீலைகள்.. புதுசுக்காக பழசை வெறுக்கும் ஆம்பள ஜூலி.. பொம்பள சாபம் சும்மா விடாது” என ஒரு டிவிட்டிலும், “கைத்தறி வேட்டி கட்டினவன் பட்டு வேட்டி கிடைக்கும்னு நினைச்சு கட்டின வேட்டிய கழற்றிவிட்டு கோவணத்தோட நின்னானாம்.. புரிஞ்சவங்க பிஸ்தா” என ஒரு டிவிட்டிலும் பதிவிட்டுள்ளார்.

அதாவது, பிந்து மாதவியின் வருகைக்கு பின்னே, ஆரவ் இப்படி செயல்படுகிறார் என அர்த்தம் தெரிவிக்கும் வகையில் அவர் டிவிட் செய்துள்ளார் எனத் தெரிகிறது.