பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரெட் கார்டு மூலம் மஹத் வெளியேற்றப்பட்டார். மஹத் வெளீயேறியதற்கு முழுகாரணம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவே காரணம் என்று பிக்பாஸ் போட்டியாளர்கள மட்டுமின்றி பொதுமக்களூம் கருதுகின்றனர். இவர்கள்து பேச்சைக்கேட்டு நடந்ததாலே மஹத் கெட்டபெயர் வாங்கியது மட்டுமல்லாமல் அவரது காதலி பிராச்சியின் வெறுப்பையும் சம்பாதித்தார்.

இந்த நிலையில் இது குறித்து பிக்பாஸ் 1 போட்டியாளரும் நடிகையுமான ஆர்த்தி டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியபோது,யாஷிகா, ஐஸ்வர்யா முதலை கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போய்டுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என ஆர்த்தி ட்விட்டரில்தெரிவித்துள்ளார்.