‘இமைக்கா நொடிகள்’ படத்துக்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூமராங்’. இந்த படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘பேட்ட’ புகழ் மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா, உபேன் படேல் நடித்துள்ளனர். ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, இந்த படத்தை மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-சிவா விஷ்ணு