‘சர்வம் தாள மயம்’ படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தை வசந்தபாலன் இயக்கி வருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி புகழ் அபர்ணதி டூயட் பாடி ஆடியுள்ளார்.

இதற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் அபர்ணதி லேடி தாதாவாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.