எங்க வீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர் நடிகை அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் போராடினார். ஆர்யாவை நீ.. வா.. போ என ஒருமையில் அழைக்கும் அளவுக்கு அவரிடம் நெருக்கமானார். இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் உருவானது.

ஆனாலும், அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும், தான் அளிக்கும் பேட்டிகளில் ஆர்யாவுக்கு பிடித்த பெண் நான்தான் என தொடர்ந்து அபர்ணநதி கூறி வந்தார். இன்ஸ்டாகிராமில் abarnathi_6ya என்றே பெயர் வைத்திருக்கிறார். ஆனால், ஆர்யாவோ சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடரும் ரசிகர்கள், ஏன் இன்னும் ஆர்யாவை உங்கள் பேருக்கு பின்னால் வைத்திருக்கிறீர்கள்?. முதலில் அதை மாற்றுங்கள் என தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.