தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமியின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.

தற்போது புழல் சிறையில் உள்ள அபிராமி அழுதுகொண்டே இருக்கிறாராம். சக கைதிகளுடன் சரியாக பேசுவதில்லையாம். ஆனாலும் மற்ற கைதிகள் அவரிடம் உங்க கதையை சொல்லுங்க என்று நச்சரித்து வருகிறார்களாம். இதனால் வேதனை அடைந்த அபிராமி ஜெயிலரிடம் தனக்கு வேறு அறை கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.