இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ உள்பட பல திரைப்படங்களை சென்னையில் ரிலீஸ் செய்த திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ‘ஆறாம் திணை’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்

இந்த விழாவில் அவர் பேசியதாவது: ஒரு படத்தின் வெற்றி, வசூல் ஆகியவை திரையரங்குகளால் தான் கிடைக்கும். ஒரு சின்ன நடிகர் பெரிய நடிகர் ஆவது அந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுவதால்தான்

இன்று விஜய் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் அவரது படங்களை நாங்கள் திரையரங்குகளில் ஓட்டி வெற்றி பெற செய்ததால் தான் இன்று அவர் பெரிய நடிகராக உள்ளார்’ என்று பேசினார்,.