சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் ஒன்று அபிராமி மெகா மால். நான்கு தியேட்டர்கள் கொண்ட இந்த மாலில் படம் பார்ப்பது ஒரு நல்ல அனுபவமாக ஆடியன்ஸ்களுக்கு இருக்கும்

இந்த நிலையில் இந்த திரையரங்கில் இதுவரை ரூ.165 மற்றும் ரூ.140 என டிக்கெட் கட்டணங்கள் வசூலித்து வரும் நிலையில் தற்போது ரூ.101ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளும் அடங்கும்

ஆனால் அதே நேரத்தில் இந்த டிக்கெட் குறைப்பு வரும் மார்ச் மாதத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி தேர்வு வருவதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது