பாலிவுட்டின் திரையுலகின் பிரபலத் தம்பதிகளான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இவர்களின் மகளான ஆராத்யா பச்சனுக்கு நேற்று (நவ.15) பிறந்த நாள். இதனை அமிதாப் பச்சன் குடும்பத்தினர் சந்தோஷமாக கொண்டாடினர்.

ஐஸ்வர்யா ராய் மகளான ஆராத்யாவுக்கு தற்போது 7வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாட்டத்தில் குதுகளித்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.