ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி

05:08 மணி

இயக்குனர் பா.ரஞ்சித் நடிகர் ரஜினிகாந்தை வைத்து  ‘கபாலி’ படத்தை இயக்கினார்.

அதன் பின் நடிகர் ரஜினி இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 2.0 என்ற படத்தில் நடிக்க போய்விட்டார்.  தன்னுடைய அடுத்த படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை..

அந்நிலையில், ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்தே படம் இயக்குகிறார் எனவும், அந்த படத்தை நடிகர் தனுஷ், தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது. நடிகர் தனுஷும் அதை உறுதி செய்தார்.

இந்நிலையில் அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை இவர் தமிழில் நேரிடையாக எந்த படத்திலும் நடித்தில்லை. எனவே இதுதான் தமிழில் அவருக்கு முதல் படமாகும்.

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்தார்.  இந்த படத்திலும் பாலிவுட் நடிகை வித்யாபாலனே நடிக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. அவர்தான் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என ரஞ்சித் தரப்பு நம்புவதாக தெரிகிறது.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812