அஜீத் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி – இயக்குனர் சிவா டிவிட்

நடிகர் அஜீத் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக சென்னையில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு புகைப்படக் கலைஞர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். சினிமா படப்பிடிப்பிறக எந்த ஊருக்கு மற்றும் நாட்டிற்கு சென்றாலும் தன்னுடன் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டுதான் அவர் செல்வார். அங்கு அவருக்கு பிடித்த இடங்களை அவர் கேமராவில் புகைப்படம் எடுப்பார்.

அப்படி அவர் அடுத்த புகைப்படங்களின் தொகுப்பை சென்னை, டிடிகே சாலையில் உள்ள ஃபோக்கஸ் ஆர்ட் கேலரி என்ற ஐடத்தில் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். விவேகம் படத்தின் இயக்குனர் சிவா இன்று அங்கு சென்று அந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.

அதன் பின், அதுபற்றி  தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “அஜீத் சார் ஒரு தேர்ந்த புகைப்பட கலைஞராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அனைத்து அஜீத் ரசிகர்களும், புகைப்பட கலைஞர்களும் இங்கு சென்று அஜீத்தின் திறமையை பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.