விவேகம் படத்தில் தல அஜீத்தின் ரோல்… வெளிவராத தகவல்…

நடிகர் அஜீத் நடிக்கும் விவேகம் படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றி சில முக்கிய விஷயங்கள் வெளியே கசிந்திருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் சிவா, அஜீத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட கருப்பு நிற டீ-சர்ட் அணிந்த படி ஒரு புகைப்படம் வெளியானது. அதன்படி அவர் ஒரு ரகசிய உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அஜீத்தின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடும் பல்கேரியன் போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அப்படத்தின் வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராய் தீவிரவாத தலைவனாக நடிப்பார் எனத் தெரிகிறது.

இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் பல்கேரியன் நாட்டு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் எனில், அஜீத் அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு இந்தியராக இருக்க வேண்டும். மேலும், அவர் அந்த படத்தில் அவர் யூரோப்பியன் நாட்டின் குடிமகனாக நடிக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது. அல்லது, தீவிரவாத குழுக்களை அழிக்கும் முக்கிய பணிக்காக, இந்திய அரசு அவரை அங்கு அனுப்பி வைக்கும் படி கதை அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

மொத்தத்தில், அஜீத் சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.