‘மீடூ’ குறித்து நடிகர் அஜித் கருத்து தெரிவித்ததாக நடிகை மதுமிதா கூறியுள்ளார்.

 

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம்,வேதாளம்,விவேகம் போன்ற படங்கள் வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் இப்போது உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. மேலும் இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் பொங்கல் திருநாளன்று வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா,விவேக்,ரோபோ சங்கர்,யோகி பாபு,மதுமிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் நடித்ததை பற்றி நடிகை மதுமிதா கூறியதாவது,படப்பிடிப்பில் அஜித் எங்களிடம் ஜாலியாக பேசுவார்.தற்போது ‘மீடூ’சர்ச்சை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.ஆனால் ‘மீடூ’ பற்றி சில மாதங்களுக்கு முன்னே எங்களிடம் அஜித் கூறியிருக்கிறார்.ஹாலிவுடில் ‘மீடூ’னு ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது.அது மட்டும் தமிழ் திரையுலகில் நடந்தால் பல பாலியல் பிரச்சனைகள் குறைந்துவிடும் என்றார்.இப்போ அவர் சொன்னது போல் நடந்துருக்கு,இவ்வாறு நடிகை மதுமிதா கூறியுள்ளார்.