செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

11:20 மணி

Loading...

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய இவா் கல்லீரல் பாதிப்பால் சுமாா் 6 மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வந்தவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மருத்துவா்கள் அவரது மனைவியிடம் அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை, விரைவில் அவரது உயிா் பிாிந்துவிடும் என்று கைவிாித்து விட்டனா். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறிவிட்டனா்.. இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.

இவா் மறைந்த இயக்குநா் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவா். இவருக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளாா். தமிழில் 900 படங்களுக்கு மேல்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளாா் அல்வா வாசு. அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களிலும், நடிகா் வடிவேலுடன் இவா் நடித்த காமெடிகள் மிகவும் பிரபலமானவை.

(Visited 170 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com