அரவிந்த் சாமி-த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்து
உருவாகியுள்ள படம் ‘சதுரங்கவேட்டை 2’. இப்படத்தை
நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான மனோபாலா
தயாரித்துள்ளார்.

ஆனால், இப்படம் வெளியாகாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நியைில், நடிகர் அரவிந்த்சாமி தனக்கு வரவேண்டிய ரூ.1.79
கோடி சம்பள பாக்கி வரவில்லை எனவும், அதனை
தயாரிப்பாளர் மனோபாலா தர வலியுறுத்தி, சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  எந்தவொரு சத்தமின்றி வெளிவந்த பாம்பு சட்டை தாக்கு பிடிக்குமா?

இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்த மனோபாலா, ‘பட
வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்து
விடுவதாகவும், முதல் கட்டமாக அக்டோபர் 10-ஆம் தேதிக்குள்
25லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல்
படத்தை வெளியிடமாட்டேன்’ என உத்தரவு அளித்திருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  வைகை எக்ஸ்பிரஸ் விமா்சனம்

மனோபாலாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட
உயர்நீதிமன்றம், “அக்டோபர் 12-ஆம் தேதி இரு தரப்பினரும்,
நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சனை
பற்றி பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்” என
உத்தரவிட்டுள்ளது.