மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் பக்ரு…

மலையாள காமெடி நடிகரான பக்ரு மீண்டும் ஒரு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகர் ஜெய் நடித்த டிஷ்யும் மறும் அதிசய தீவு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பக்ரு.. ஆனால், அதன் பின் அவர் தமிழ் படங்களில் தலை காட்டவில்லை.  இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. குருராஜா இண்டர் நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘உப்பு புளி காரம்’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை குருராஜா இயக்குகிறார். இந்த திரைப்படம் வேதாளம், விக்ரமாதித்தன் கதையை அடைப்படையாக கொண்டதாகும். அதில், வேதாளமாக பக்ரு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.