நடிகர் பரத் நடிப்பில் வரும் காளிதாஸ் படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

பரத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காளிதாஸ். பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத் அதே ஷங்கரின் தயாரிப்பில் வந்த

காதல் திரைப்படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிந்த நடிகர் ஆகிவிட்டார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தாலும் நல்ல டான்ஸராக இருந்த போதிலும் இன்னும் இவர் உயரம் தொடும் அளவுக்கு மெகா ஹிட் படங்கள் அமையாதது வருத்தமே.

நல்ல கட்டுடல் உடைய ஆக்‌ஷன் ஹீரோவுக்கு உள்ள அனைத்து தகுதிகளும் இருந்து அவர் எதிர்பார்க்கும் படங்கள் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் செந்தில் என்பவர் இயக்கத்தில் வரவிருக்கும் காளிதாஸ் படத்தை மிக எதிர்பார்த்து காத்திருக்கிறார் சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில்இப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக இவர் நடித்துள்ளார் இப்படத்தை இவரும் இவரது ரசிகர்களும் மிக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.