மறைந்த பழம்பெறும் காமெடி நடிகர் நாகேஷ் நடித்த ‘சர்வம் சுந்தரம்’ என்கிற தலைப்பில் ஒரு புதிய படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

இந்தப் படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடித்துள்ளார் என்பதுதான் சிறப்பு செய்தி. இவர் இப்படத்தில் சந்தானத்துடன் படம் முழுக்க உடன் வருகிறாராம். மேலும், தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பார் என அப்படக்குழு கூறி வருகிறார்கள். மிமிக்ரி மற்றும் தனது அப்பா மற்றும் தாத்தாவின் பாணியில் நடித்து சந்தானத்தின் பாராட்டை பெற்றுள்ளாராம் பிஜேஷ்.

இந்தப் படம் வெளியானவுடன், தமிழ் சினிமா உலகில் காமெடியனாக அவர் வலம் வருவார் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.