தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னக மொழிபடங்களில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் கேப்டன் ராஜ். தமிழில் சத்யராஜ் நடித்து பிரதாப்போத்தன் இயக்கிய ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பார்.ஜீவா படத்தில் இவர் ஏற்று நடித்த டி.எஸ்.பி கேரக்டர் பிரபலமானது.

கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழில் ஜல்லிக்கட்டு,ஜென் டில்மேன், தர்மத்தின் தலைவன், உள்ளே வெளியே, உள்ளம் கவர்ந்த கள்வன், என் ஜீவன் பாடுது,சூரசம்ஹாரம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் கேப்டன் ராஜ்.

தமிழில் பெரும்பாலும் வில்லத்தனமான வேடங்களில் தான் நடித்திருப்பார். இந்தியன் ஆர்மியில் பணிபுரிந்தவர் இவர் என்பதால் கேப்டன் ராஜ் என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது.

68வயதான இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.