ஹாலிவுட் மற்றும் சீன நடிகர் சோ உன் ஃபேட்(64) தனது சொத்துகளில் பெரும்பாலனவற்றை மக்களுக்கு தானமாக எழுதி கொடுத்துவிட்டார்.

ஹாங்காக் நடிகரான சோ உன் ஏராளமான சீன படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சீன படம் தமிழில் பாயும் புலி பதுங்கும் நாகம் என்ற பெயரில் தமிழில் வெளியாகி 20 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 2015ம் ஆண்டு உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் இவர் முதலிடத்தில் இருந்தார். தற்போது 24வது இடத்தில் இருக்கிறார்.

இவர் தன்னுடைய சொத்துக்களை அனைத்தையும் பொதுமக்களுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவிற்கு பின் சொத்துக்கள் பொதுமக்களுக்கு சென்றுவிடும். அதற்கான அறிவிப்பை அவரும், அவர் மனைவியும் செய்தியாளர்களிடம் கடந்த 24ம் தேதி அறிவித்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த சோ உன் “இறந்து பின் நம் பணத்தை நாம் எங்கும் கொண்டு செல்ல முடியாது. வானத்தில் எந்த வங்கியும் இல்லை. எனவே, என் பணம் மக்களுக்கு சென்று சேர்வதே சரியானது” என நான் நினைக்கிறேன் எனக்கூறினார்.