தான் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் பற்றி ட்விட்டரில் தகவல்களை பகிர்ந்துகொண்ட தனுஷ்..

தனுஷ் இயக்கத்தில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ப.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்த ரஜினி தனுஷை கட்டி பிடித்து பாராட்டி ”இன்னும் 10 வருஷத்துக்கு வேறு படத்தை இயக்கதீர்கள். இந்த படமே பல வருடங்கள் உங்கள் பேரை சொல்லும்” என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து  ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது,

நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளோம். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம்  அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. ஹாலிவுட்டில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

அடுத்ததாக படம் இயக்குவது பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. வேலையில்லா பட்டதாரி-2 மிகவும் சிறப்பாக வந்துள்ளது. விஐபி1-ஐ விட இந்த படம் உங்களை சந்தோஷப்படுத்தும், காஜோலின் நடிப்பும் பேசப்படும். இவ்வாறு அவர் கூறினார்.