பந்தா செய்யும் மடோனா ; கடுப்பான தனுஷ் – காரணம் என்ன?

பவர் பாண்டி படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வராத நடிகை மடோனா செபாஸ்டின் மீது அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான தனுஷ் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் பெரிதும் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா. அதன்பின் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தற்போது, கவண், பவர் பாண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கும் மடோனா மிகவும் பந்தா செய்கிறாராம். நடிகை நயன்தாரா போல், எந்த புரமோஷன் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். பவர்பாண்டி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். அடுத்த வாரம் இப்படம் வெளியாகவுள்ளது.

எனவே, சமீபத்தில் அப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். மேலும், படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ளுங்கள் என அவரின் மேனேஜர் மூலம் அழைப்பு விடுத்தனர். ஆனால், அவரை திட்டி அனுப்பி விட்டாரம். இதனால் மடோனா மீது, அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.