நடிகர் தனுஷ் யார் மகன்? மதுரை ஐகோர்ட் கிளை பரபரப்பு தீர்ப்பு

பிரபல நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கொண்டாடி மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட் கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது

இந்த தீர்ப்பின்படி மதுரை தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.