பின்னணிப் பாடகியான சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து வெளியாகும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என நடிகர் தனுஷ், திரிஷா, விஜய் தொலைக்காட்சி புகழ் டி.டி ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிருத், ஆண்டிரியா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் சஞ்சிதா ஷெட்டி மட்டும் அது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், மற்றவர்கள் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் “ சுச்சிலீக்ஸ் எனும் தலைப்பில் வெளியாகும் புகைப்படங்கள் பற்றி தனுஷிடம் கேட்டேன். அதற்கு அவர் ரஜினிகாந்த் போல் சிரித்து விட்டு, இது விளம்பரத்திற்காக செய்யப்படும் ஒரு விஷயம். இதில் வேறொன்றும் இல்லை எனக் கூறினார்” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.