மாரி 2 செய்தியாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் தாமதமாக வந்ததன் காரணம் தெரியவந்துள்ளது.

மாரி 2 படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் நேரத்திற்கு வந்துவிட்ட நிலையில் படத்தின் ஹீரோவான தனுஷ் தாமதமாக வந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  'சகா' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

மாரி 2 படத்தை வருகிற 21ம் தேதி ரிலீஸ் செய்தே தீருவேன் என தனுஷ் முரண்டு பிடித்த விவகாரத்தில், அவருக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பஞ்சாயத்து எழுந்தது ஊரறிந்த செய்தி ஆகும். மாரி 2 படத்தால் சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா ஆகிய படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  இந்த ஆடைக்கு ரூ.1.15 லட்சமா? - ஹன்சிகா அலப்பறை தாங்கலையே!

எனவே, சீக்கிரம் வந்தால் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதாலேயே, மாரி 2 செய்தியாளர்கள் சந்திப்புக்கு தனுஷ் தாமதமாக வந்து, மேடையில் மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டார் எனவும் செய்தியாளர் சந்திப்பையே அவர் தவிர்த்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.