Karthik Subbaraj – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ‘அசுரன்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்து வெளியாகவுள்ளது. அதேபோல், கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். அதோடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார்.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வொய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளார்.

இந்தப் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.