நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில், சக்தி சௌந்திரராஜன்
இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ திரைப்படம்
இந்தியாவின் முதல் விண்வெளிப் படமாகும்.

தற்போது, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல்
இயக்கத்தில்’அடங்க மறு’ என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து
வருகிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் காஜல் அகர்வால்
ஹீரோனியாக நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக
நடிப்பது இதுவே முதல் முறை.

இந்த படத்தை, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி
கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு
பூஜையுடன் தொடங்கியது.

இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு,
சம்யுக்தா ஹெக்டே உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.