சாயிஷாவை உடனே புக் பண்ணுங்க – ஜெயம் ரவி அட்வைஸ்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் வனமகன்.

இப்படத்தில் ஜெயம் ரவி காட்டில் வாழும் மனிதராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா என்ற புதுமுகம் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இது அவருக்கு 50வது படமாகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் ஜெயம் ரவி கலந்து கொண்டு பேசியவதாவது:

இதுவரைக்கும் நான் என்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், இயக்குனர் விஜயை சந்தித்த பிறகுதான் நான் எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது. நான் வனமகன் என்றால், இயக்குனர் விஜய் ஒரு தெய்வ மகன்.

இந்த படத்தில் என்னுடன் நடித்துள்ள் சாயிஷா மிகவும் திறமையான நடிகை. அவரின் கால்ஷீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனவே, தயாரிப்பாளர்கள் அவரை இப்போதே புக் பண்ணிடுங்க… சினிமாவில் நடிப்பது போராடிக்கக் கூடாது என்பதால்தான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி, தோல்வி எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவாக உள்ள என் ரசிகர்களுக்கும் நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன்” என அவர் பேசினார்.