ஜோதிகாவுடன் இணையும் ஜீவிபிரகாஷ்?

முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36வயதினிலே படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து கதாநாயாகிக்கு முக்கியதத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கணவர் சூர்யா போலிஸ் அதிகாரியாக நடித்த சி-3 படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமாகி டார்லின் படத்தில் நடிகராக உருவெடுத்த ஜீ.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் மார்ச் 1 தேதி முதல் துவங்க உள்ளது. இந்த படத்தை பற்றி அதிகாரபூர்வமான செய்திகள் விரைவில் அறிவிக்கபடுமென எதிர்பார்க்கப்படுகிறது