தெர்மாகோல் விஷயத்தை கலாய்த்த கமல்ஹாசன்…

சினிமா விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன், அங்கு பேசுகையில் தெர்மாகோல் விஷயத்தை கிண்டலடித்து பேசியுள்ளார்.

சமீபத்தில், மதுரையில் உள்ள வைகை அணையில் இருக்கும் நீர் ஆவியாகாமல் இருப்பதற்காக அதில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மாகோலை போட, அவைகள் அடுத்த நிமிடமே கரை ஒதுங்கிய விவகாரம்தாம் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டியாக இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் ஜீவா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு, ஆடியோவை வெளியிட்டார். அதன் பின் அவர் பேசும்போது “ இந்த படத்தின் டிரெய்லரை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் தெரிந்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். இப்படம் ஆவிகளை பற்றிய படம். ஆனால், இந்த ஆவிக்கு தெர்மாகோல் தேவையில்லை” எனப் பேசினார். அவர் இப்படி பேசியதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.