சின்ன பாபு பட வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் வந்த கார்த்தி

கார்த்தி சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ்இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிகரமாக வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு சென்று பார்க்க கூடிய படம் இது என இப்படம் மிக பாப்புலராகி வருகிறது.

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான சின்னபாபு ஆந்திராவிலும் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படத்தின் வெற்றிவிழாவுக்கு ஐதராபாத் வந்த கார்த்தி மழை காரணமாக விழா நடந்த இடத்திற்கு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.அதிக போக்குவரத்து நெரிசல் நிலவியதால் காரை விட்டு அங்கிருந்த ஆட்டோவில் கார்த்தி பயணப்பட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.