சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகர் கார்த்திக் மிரட்டலான ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளர். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் கார்த்திக் நடித்துள்ளார் என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது.

நடிகர் கார்த்திக் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். எனவே, அதை கருத்தில் கொண்டு அவரை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடிக்க வைத்துள்ளாராம். ஏற்கனவே, அனேகன் படத்தில் வில்லனாக கார்த்திக் நடித்துள்ளார். இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட வில்லனாக இப்படத்தில் தோன்றப் போகிறாராம் கார்த்திக்.

இப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.