நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘தீரன்’,’கடைக்குட்டி
சிங்கம்’ ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப்
பெற்றது. இதையடுத்து, அறிமுக இயக்குனர் லட்சுமணன்
இயக்கத்தில் ‘தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் உள்ள அழகிய
மலை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கச் சென்றனர்.
ஆனால், அங்கு திடீரென நில சரிவு ஏற்பட்டது. இதனால் கார்,
பஸ் மற்றும் பல பொருட்கள் அடித்து செல்லப்பட்டது.
வெள்ளத்தால் படக்குழுவினர் 140 பேர் அங்கு மாட்டிக்
கொண்டனர்.

இதனால், அவர்கள் சாப்பிட உணவு கூட கிடைக்காமல் அந்த
இடத்தில் மாட்டிக்கொண்டனர். இதனால் தயாரிப்பாளருக்கும்
பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.