நவரச நாயகன் என 90களில் அழைக்கப்பட்டு முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் கார்த்திக்.இப்போதும் இளமை தோற்றத்துடன் ஹீரோ லுக்கிலேயே இருக்கிறார்.

சமீபத்தில் இவரும் இவர் மகனும் சேர்ந்து நடித்த மிஸ்டர் சந்திர மெளலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நாளிதல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு டைரக்‌ஷன் ஆசை மிக தீவிரமாக இருப்பதாகவும் ஒரு படம் முடித்துவிட்டு ஸ்க்ரிப்ட் எழுதி டைரக்‌ஷன் செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபடும்போது நடிப்பதற்காக நல்ல கதையோடு யாராவது வந்துவிடுகின்றனர்.

அந்த கதாபாத்திரத்தை விட்டுகொடுக்க முடியாமல் டைரக்‌ஷனை மூட்டை கட்டிவிட்டு நடிக்க சென்றுவிடுகிறேன். இந்நிலை தொடர்ந்து நடக்காது கூடிய விரைவில் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.