தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கருணாகரன் ‘கலகலப்பு’,’சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’,’யாருமிருக்க பயமே’. ‘லிங்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

இவர் அண்மையில் நடந்த சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து தனது டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.

கருணாகரன் ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கின்பொழுது ‘சர்கார்’ படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினர்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளாளும், மீம்ஸ்களை உருவாக்கியும் கிண்டல் செய்தனர்.

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் பேசிய விஜய், ‘கடுப்பேற்றுபவர்களிடம் கம்முன்னு இருக்க வேண்டும்’ என ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும், அவர் சில குட்டி கதைகள் கூறி அரசியல் தலைவர்களையும் விமர்சித்திருந்தார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாகரன், ‘குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்’ என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதனால், விஜய் ரசிகர்கள் தகாத வார்த்தைகளால் கருணாகரனை வசைபாடியுள்ளனர். இதற்கு பதில் அளித்த கருணாகரன் ‘ கடுப்பாக இருந்தால் கம்முன்னு இருக்க வேண்டும்’ என விஜய் கூறிய வார்த்தைகளாளே பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில், தன்னை வசைபாடியவருக்கு கருணாகரன் டிவிட்டரில் “தம்பி எங்க அப்பா இந்த நாட்டுக்காக ’ரா’(RAW) அதிகாரியாக என்ன எல்லாம் செய்தார் என்று உனக்கு தகவலுக்காக சொல்கிறேன்.

உன்னைப் போன்ற போலி ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை நான் வெறுக்கிறேன்” என்று கோபத்துடன் விஜய்யின் டிவிட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு டேக் செய்துள்ளார்.