பிரபல கமெடி நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை

பாலிவுட்டில் பிரபல காமெடி நடிகர் மனோஜ் கோயல். சினிமா மட்டுமின்றி தற்போது சின்னத்திரையிலும் முத்திரை பதித்துள்ளார். இவரது  மனைவியின் பெயர் நீலிமா. மும்பை கண்டிவாலி பகுதியில் வசித்து வரும் இவருக்கு 8 வயது மகள் உண்டு.

இந்நிலையில் நேற்று மதியம் தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது மனோஜ் ஷூட்டிங்கில் இருந்தார்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நீலிமா  கடும் மனஅழுத்தத்தால் பாதிக்காப்பட்டிருந்தது தெரியவந்தது.