ராஜ்கிரண் வேடத்தில் மோகன்பாபு – தெலுங்கிற்கு செல்லும் ப.பாண்டி

10:18 காலை

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகம் காட்டிய தனுஷ், ப.பாண்டி படம் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். நடிகர் ராஜ்கிரனை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கியுள்ள ப.பாண்டி படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்த நடிகரும் தனது மாமனாருமான ரஜினிகாந்திற்கு அவர் சமீபத்தில் திரையிட்டு காட்டியுள்ளர் தனுஷ். படத்தை பார்த்து அசந்து போன ரஜினி, இன்னும் 10 வருடத்திற்கு படம் இயக்காதீர்கள். இந்த ஒரு படமே பல வருடங்களுக்கு உங்கள் இயக்கம் பற்றி பேசும் எனக் கூறினாராம்.

மேலும், தனது நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை சென்னை அழைத்து ப.பாண்டி படத்தை பார்க்க வைத்துள்ளார் ரஜினி. படத்தை பார்த்து அசந்து போன மோகன்பாபுவிடம், ப. பாண்டி தெலுங்கு ரீமேக்கில் நடிக்குபடி ரஜினி கூறியுள்ளார். ரஜினியே கூறிவிட்டதால், தெலுங்கு உரிமையை வாங்கி, ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் மோகன்பாபு. இப்படத்தை திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்பிரமணிய சிவா இயக்கவார் எனக் கூறப்படுகிறது.

The following two tabs change content below.
சிவ குமார்

சிவ குமார்

சிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544