ஓசியில் சாப்பிடும் மனநிலையில் தமிழர்கள் – நடிகர் சர்ச்சை பேச்சு

தமிழர்கள் பற்றி நடிகர் மோகன்ராம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் மோகன்ராம். இவர் சமீபத்தில், ஒரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற திருட்டு விசிடி தொடர்பான விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என தமிழர்கள் சொன்னதெல்லாம் ஒரு காலம். அது தற்போது மாறிவிட்டது. ஓசியில் கிடைத்தால் எதையும் சாப்பிட்டு விடலாம் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள்” என கருத்து தெரிவித்தார்.

இவரின் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட் படங்களை காப்பி அடிக்கும் சினிமாகாரர்கள் பற்றி என்ன சொல்வது என எழுத்தாளர் மதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.