தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நமீதா ஆலோசனை!

சொந்தம் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பின் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நமீதா.
தமிழ் தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். மேலும் இங்கிலீஷ் காரன், பில்லா மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களின் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
தமிழில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் தன் உடலின் மேல் கவனம் செலுத்தாததால் உடல் பருமனாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் படவாய்ப்பும் குறைந்தது.
தற்போது உடல் எடையில் கவனம் செலுத்தி மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது பரத் நடிக்கும் பொட்டு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது,”தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தொடர்ந்து படிக்கும்போது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு முறை பழசாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.