எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருது பெறுவார் – நடிகர் நாசர் பாராட்டு

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்திற்காக நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நிச்சயம் தேசிய விருது பெறுவார் என நடிகர் நாசர் பாராட்டியுள்ளார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மொழி, சூது கவ்வும் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது அவர், இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி வரும் ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் நாசரும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது பற்றி நாசர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது “ இயக்குனர் ஸ்ரீகணேஷ், இப்படத்தின் கதையையும், என்னுடைய கதாபாத்திரம் பற்றியும் என்னிடம் கூறிய போது அவர் மேல் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால், முதல் நாள் நான் படப்பிற்கு சென்ற போது, அவர் படப்பிடிப்பு குழுவினரை கையாண்ட விதம் என்னை ஆச்சர்ய படுத்தியது. ஒரு காட்சியில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பை பார்த்து நான் வியந்து விட்டேன். அந்த ஒரு காட்சிக்காகவே அவர் நிச்சயம் தேசிய விருது பெறுவார்” என அவர் தெரிவித்தார்.