பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஓவியா போட்ட முதல் டிவிட்….

ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.அதன் பின் அவர் தன்னுடைய சொந்த ஊரான கொச்சினுக்கு சென்று விட்டார். தன் தலை முடியையை வெட்டிக்கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது ரசிகர்களுக்காக ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் “என் மீது நீங்கள் காட்டிய அன்பையும், அக்கறையையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.