நடிகர் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜானி. மிகப்பெரும் பொருட்செலவில் இவர் தந்தை தியாகராஜன் தனது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து வரும் இப்படத்தை வெற்றி செல்வன் இயக்கி வருகிறார்.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் டீசரை சில நாட்கள் முன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்.

இப்படத்தின் சென்சார் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும் டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/ActorPrashanthOfficial/photos/pb.203052919856512.-2207520000.1537505082./1053449548150174/?type=3&theater