பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிருத்விராஜ் நடிகர்கள் அஜித் மற்றும் சூர்யாவைப் பற்றி சர்ச்சையானக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

90 களின் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் பப்லு பிருத்விராஜ். அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா போன்றவர்களின் வருகையால் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கினார். மர்மதேசம்,வாணி, அரசு உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூர்யா – அஜித் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பேட்டியில் ’ நடிகர் அஜித்துக்கு நடிப்பதில் சுத்தமாக ஆர்வமே இல்லை. அவருக்கு தொழில்பக்தி இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆனால் அதிர்ஷ்டம் அவரது வீடு தேடிச் செல்கிறது. அதனால் சாதனையாளராக வலம்வருகிறரர். சினிமாவில் அவர் நடிப்பதைக் காட்டிலும் பிரியாணி சமைப்பதிலும், சாப்பிடுவதிலுமே அதிக ஆர்வம் உள்ளவராகத் தெரிகிறார்.

அதுபோல சூர்யா சினிமாவில் ஆர்வத்தோடும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். ஆனால் தன்னைச் சுற்றித்தான் உலகம் இயங்குகிறது என்ற மனநிலையில் இருப்பவர். ஓரளவு அதிர்ஷ்டம் கைகொடுத்தால் முன்னேறிவிட்டார். இனிமேல் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வாய்பில்லாததால் அவரதுக் காலம் முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துகள்  தமிழ் சினிமா உலகிலும் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களிடையேயும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.