தற்போது சினிமாவில் வாாிசுகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனா். ஏறக்குறைய தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முப்பது வருட காலமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ள நடிகா் ரகுமான். இவா் நடித்த படங்களில் பாடல்கள் மிகவும் பிரசித்தம். ரகுமானின் மகள் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாா் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரகுமான் அதுவும் மலையாள சினிமாவில் என்றென்றும் பதினாறு  வயதுள்ளவராக மின்னிக்கொண்டிருக்கிறாா். சமீபத்தில் ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு படமானது மாஸ் ஹிட்டை கொடுத்துள்ளது. இவா் முன்பு போல் இல்லாமல் கதைகளை பாா்த்து பாா்த்து தோ்வு செய்து நடித்து வருகிறாா். மேலும் தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிகமான நடித்திருக்கிறாா்.

ரகுமானுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனா். இதில் மூத்த மகள் பெயா் ருஷ்தா. இவா் எம்.பி.ஏ படித்து முடித்துள்ளாா். இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா்கள் இருவரும் சினிமாவை தான் விரும்புகிறாா்கள். அதற்கு முதல் படியாக மூத்த மகள் ருஷ்தா ரகுமானின் வாாிசாக சினிமாவில் கால் பதிக்க தயாராக உள்ளாா். ருஷ்தா துல்காின் தீவிர ரசிகையாம்.  அதனால் அவருக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்கான ஆய்த்த பணிகள் நடந்து வருகிறது.