இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இந்தியன்’. இப்படத்தில் உலக நாயகன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட்டானது.இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2-ஆம் பாகம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ‘லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  கமல் பாணியில் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் மெளனப்படம்

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்தியன் படம் முதன் முதலாக ரஜினியை மனதில் வைத்து தான் எழுதினேன்.அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்தது.

ஆனால் கடைசியில் முடியாமல் போனதால் கமல் நடிக்க நேர்ந்தது என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 மேக்கிங் வீடியோ